செய்திகள்
வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி

5 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும்

Published On 2020-11-26 09:26 GMT   |   Update On 2020-11-26 09:26 GMT
5 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மொரப்பூர்:

தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் மற்றும் கடத்தூர் பேரூர் தி.மு.க. சார்பில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சிந்தல்பாடி ஊராட்சி தொங்கனூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் கேஸ்.கு.மணி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வக்கீல் முனிராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மாவதி சரவணன், ஆர்.எம்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் புஷ்பராஜ் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், என்று பேசினார்.

கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் அயராது பாடுபட வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில் பதிவாகாத வாக்குகளை யாரேனும் பதிவு செய்தால் அவற்றை வாக்குச்சாவடி முகவர்கள் தடுக்க வேண்டும், என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் தாஸ், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் குபேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் அமுதா ஆதிமூலம், காந்தி, விஜயா சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் ராணி அம்பேத்கர், அம்பாலப்பட்டி கிளை செயலாளர் திருமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னகுட்டி, ஒன்றிய பிரதிநிதி வேலு மற்றும் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் கண்மணி லெனின் நன்றி கூறினார்.

Tags:    

Similar News