இந்தியா - இலங்கை கடலோர எல்லைப்பகுதியில் சுற்றித்திரிந்த படகை மடக்கி பரிசோதனை செய்ததில் 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே படகு மூலம் கடத்தப்பட்ட 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகள் பறிமுதல்
பதிவு: நவம்பர் 25, 2020 15:55
ஹெராயின்
இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே இந்தியா - இலங்கை கடலோர எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையில் படகு ஒன்று சுற்றித் திரிந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த படகை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது படகில் இருந்த 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருட்கள் கடத்தி வந்த நிலையில் காவல்படையிடம் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.
Related Tags :