செய்திகள்
கலெக்டர் சாந்தா

வெள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்- பொதுமக்களுக்கு, கலெக்டர் சாந்தா வேண்டுகோள்

Published On 2020-11-25 09:17 GMT   |   Update On 2020-11-25 09:17 GMT
அவசர உதவிக்கு வெள்ள கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயலானது இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கும் எனவும், கரையை கடக்கும் போது மிக கன மழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதி மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் வசிக்கும் குடும்பங்கள் உடனே அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வேண்டும்.

மேலும் எந்தவித அவசர உதவிக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் வெள்ளகட்டுப்பாட்டு அறையில் உள்ள 04366 226050, 04366 226623, 04366 226060, 04366 226080 தொலைபேசி எண்கள் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04366-1077 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News