மழை பாதிப்பால் சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
மழை பாதிப்பால் சென்னையில் ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியது
பதிவு: நவம்பர் 25, 2020 14:43
பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கியது.
சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர நிவர் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தொடர் மழைகாரணமாக பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிப்பை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :