செய்திகள்
உண்டியல் பணம் எண்ணப்பட்ட போது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 61½ லட்சம் வருவாய்

Published On 2020-11-25 05:29 GMT   |   Update On 2020-11-25 05:29 GMT
பழனி முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 480 வருவாய் கிடைத்துள்ளது.
பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளியிலான பொருட்கள், பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து 67 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி தலைமையில், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, முதுநிலை கணக்கு அலுவலர் மாணிக்கவேல், மேலாளர் சேகர் ஆகியோர் முன்னிலையில் கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் பழனி பகுதியிலுள்ள வங்கி அலுவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 480 வருவாய் கிடைத்தது. இதைத்தவிர தங்கத்திலான வேல், மோதிரம், தாலி, காசு என 757 கிராம் தங்கம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட 12 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நோட்டுகள் 202-ம் கிடைத்தது. மேலும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
Tags:    

Similar News