செய்திகள்
வாக்காளர் பட்டியல்

கோவையில் சிறப்பு முகாம்- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 51,303 பேர் விண்ணப்பம்

Published On 2020-11-24 09:58 GMT   |   Update On 2020-11-24 09:58 GMT
கோவை மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 51 ஆயிரத்து 303 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர்களின் வசதிக்காக கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டது. இதில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் 21-ந் தேதி 22,991 பேரும், 22-ந் தேதி 43,795 பேரும் விண்ணப்பம் அளித்தனர். 21-ந் தேதியை விட 22-ந் தேதி முகாமில் அதிகம் பேர் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்க மொத்தம் 66,786 பேர் விண்ணப்பம் அளித்தனர். அதில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 51,303 பேர் படிவம்-6 கொடுத்தனர். பெயர் நீக்க படிவம்-7-ஐ 3,075 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8-ஐ 4,465 பேரும், ஒரே தொகுதியில் திருத்தம் செய்ய படிவம் 8ஏ-ஐ 3,024 பேரும் அளித்தனர். கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, சேர்க்க திருத்தம் செய்ய அளிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை வருமாறு:-

மேட்டுப்பாளையம் -6,513, சூலூர் -9,358, கவுண்டம்பாளையம் -9,019, கோவை வடக்கு - 5,660, தொண்டாமுத்தூர்- 8,732, கோவை தெற்கு- 3,614, சிங்காநல்லூர்- 5,536, கிணத்துக்கடவு- 7,398, பொள்ளாச்சி- 5,550, வால்பாறை - 5,406. சூலூர்- 9,358 பேர்.கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 9,358 பேர் விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News