செய்திகள்
பள்ளி செல்லா குழந்தைகள்

குமரியில் பள்ளி செல்லா குழந்தைகள் 22 பேர் கண்டுபிடிப்பு

Published On 2020-11-24 09:53 GMT   |   Update On 2020-11-24 09:53 GMT
குமரியில் பள்ளி செல்லா குழந்தைகள் 22 பேர் அரசு பள்ளிகள் அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் நேற்று 2-வது நாளாக நடந்தது. அப்போது மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபானி, ராஜன், ரவிகுமார், சுகிதா, டேவிட் மற்றும் கலைவாணர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் வடிவீஸ்வரம் பறக்கின்கால் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 7 குடும்பங்கள் தற்காலிக குடிசையில் வசித்து வருகின்றனர். அங்கு 9 குழந்தைகள் இடம் பெயர்ந்ததால் இடைநின்றவர்களாக கணக்கெடுக்கப்பட்டது.

பின்னர் அந்த குழந்தைகளை ஒழுகினசேரியில் உள்ள கலைவாணர் அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே போல மாவட்டம் முழுவதும் 6 முதல் 18 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகள் 9 பேரும், மாற்றுத்திறன் குழந்தைகள் 4 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள அரசு பள்ளிகள் அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News