சேலம் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
பதிவு: நவம்பர் 24, 2020 15:02
தற்கொலை
சேலம்:
சேலம் அருகே உள்ள தைலானூர் கல்வராயன் காடு பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 39). டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு
மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இளவரசன் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இளவரசன்
பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும்,
ஏற்கனவே அவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. மேலும் இளவரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.