பாபநாசம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பதிவு: நவம்பர் 24, 2020 12:55
தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இலுப்பக்கோரை பகுதியை சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவருடைய மனைவி சுகன்யா(வயது30). இவர் சில நாட்களுக்கு முன்பு
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ்காந்தி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் அவர் திடீரென வீட்டின் அருகே உள்ள மரத்தில்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், வயிற்றுவலி காரணமாக சுகன்யா தற்கொலை செய்து
கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.