செய்திகள்
பாபநாசம் அணை

விவசாய பணிகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

Published On 2020-11-23 13:59 GMT   |   Update On 2020-11-23 13:59 GMT
விவசாய பணிகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:

வடகிழக்கு பருவமழையையொட்டி நெல்லை, மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் காட்டாற்று வெள்ளம் மற்றும் ஊர் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாமிரபரணியில் கலந்து வெள்ளப்பெருக்காக மாறியது.

இதையொட்டி பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணை மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின்றி மீண்டும் வெயில் அடித்தது. இதனால் விவசாய பணிகளுக்கு பாபநாசம் அணை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 978 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 128.60 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 141.66 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 94.65 அடியாகவும் உள்ளது.
Tags:    

Similar News