ஆற்காடு அருகே உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
பதிவு: நவம்பர் 23, 2020 15:31
தற்கொலை
ஆற்காடு:
அரியலூர் மாவட்டம், தாமரைபூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே லாடவரம் கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா (வயது 18). இவர் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துது விசாரணை நடத்தி வருகின்றனர்.