செய்திகள்
தீ விபத்து

மதுரை ஜவுளிக்கடையில் மீண்டும் தீ விபத்து

Published On 2020-11-22 01:25 GMT   |   Update On 2020-11-22 01:25 GMT
மதுரையில் மீனாட்சி கோவில் அருகிலுள்ள ஜவுளிக்கடையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை:

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகிலுள்ள ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள்  உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News