செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை திமுக ஏற்கும் -மு.க.ஸ்டாலின்

Published On 2020-11-21 08:09 GMT   |   Update On 2020-11-21 08:09 GMT
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுக இந்த கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை முழுமையாக ஏற்கும்.

திமுக ஆட்சியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, கிராமப்புற-ஏழை-பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவும் நிச்சயம் நிறைவேறும். இது உறுதி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News