செய்திகள்
கே.பி.ராமலிங்கம்

அமித் ஷாவை இன்று சந்திக்க ஏற்பாடு... பாஜகவில் இணைகிறார் கே.பி.ராமலிங்கம்

Published On 2020-11-21 05:58 GMT   |   Update On 2020-11-21 05:58 GMT
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் மு.க.அழகிரியின் ஆதரவாளரான  கே.பி.ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். 

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும், 144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் கே.பி. ராமலிங்கம் கருத்து தெரிவித்தார். இதனால், எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்தார். அப்போது, இன்று சென்னை வரும் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். எனவே, கே.பி.ராமலிங்கம், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்தன. இதற்காக  அமித் ஷாவை அழகிரி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News