செய்திகள்
பொன்முடி எம்.எல்.ஏ.

சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி எம்.எல்.ஏ. மீதான விசாரணை 14-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2020-11-19 08:11 GMT   |   Update On 2020-11-19 08:11 GMT
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி எம்.எல்.ஏ. மீதான விசாரணையை அடுத்த மாதம் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம்:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல் ஏழுமலை ஆஜராகி மனுதாக்கல் செய்தார். 

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News