செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க வாய்ப்பு இல்லை- பொதுப்பணித்துறை அதிகாரி

Published On 2020-11-17 06:29 GMT   |   Update On 2020-11-17 09:31 GMT
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இப்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:

செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது:

* செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.17 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 450 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்க வாய்ப்பு இல்லை.

* மொத்தமுள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் நிரம்பி உள்ளன. 127 ஏரிகள் 75% கொள்ளளவை எட்டியுள்ளன. 206 ஏரிகள் 50 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன.

* செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏரி திறக்கப்படும்.

* 2015 நடந்தது போல அதிகளவு மழை இப்போது பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News