செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-11-17 01:33 GMT   |   Update On 2020-11-17 01:33 GMT
மாவட்டத்தில் 116 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மாவட்ட சுகாதாரத் துறையால் பாதிப்பு அடைந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் தினசரி 5,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ பரிசோதனை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பாதிப்புகள் குறைந்தாலும் மருத்துவ பரிசோத எண்ணிக்கையினை குறைக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ள நிலையிலும் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையினர் பரிசோதனை எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விட்டனர். நேற்றுமுன்தினம் 174 பேருக்கு மட்டுமே ளமருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளியிடவில்லை

இந்தநிலையில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளியிடவில்லை. 116 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் வரை 2,575 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளை அறிவிக்காத நிலை இருந்தது. 15 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 16 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறையினர் மெத்தனம் காட்டுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் பட்டியலை தினசரி தவறாமல் வெளியிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது தெரிவித்த அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
Tags:    

Similar News