செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் இன்று 1,725 பேருக்கு கொரோனா தொற்று- 17 பேர் உயிரிழப்பு

Published On 2020-11-16 13:42 GMT   |   Update On 2020-11-16 13:42 GMT
தமிழகத்தில் இன்று புதிதாக 1,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 1,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 384 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 32 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News