பீகார் முதல்வராக பதவியேற்க உள்ள நிதிஷ் குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் சிறப்பாக அமைய வேண்டும்... நிதிஷ் குமாருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
பதிவு: நவம்பர் 16, 2020 16:11
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை:
பீகார் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாருக்கு, ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவருடன் துணை முதல்வர்கள் மற்றும் 12 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்கவுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தொடர்ந்து நான்காவது முறையாக பீகார் முதல்வராக பொறுபேற்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தங்களின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய விரும்புகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :