செய்திகள்
டாஸ்மாக் கடை

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ரூ.20¾ கோடிக்கு மது விற்பனை

Published On 2020-11-16 03:41 GMT   |   Update On 2020-11-16 03:41 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ரூ.20¾ கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
திண்டுக்கல்:

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் மதுபான விற்பனை களை கட்டியது. அந்த வகையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளிலும் கடந்த 13, 14-ந்தேதிகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் திண்டுக்கல், வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை என மாவட்டம் முழுவதும் 156 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினமும் ரூ.2 கோடி வரை மதுபானம் விற்பனையாகும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 13-ந்தேதி ரூ.6 கோடியே 18 லட்சமும், நேற்று முன்தினம் ரூ.6 கோடியே 88 லட்சம் என 2 நாட்களில் மட்டும் ரூ.13 கோடியே 6 லட்சத்துக்கு மதுபானம் விற்பனை ஆகி உள்ளது.

இதேபோல் தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், தேனி என மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 13, 14-ந்தேதிகளில் மது விற்பனை களை கட்டியது. கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர். அதன்படி, தீபாவளிக்கு முதல் நாளான 13-ந்தேதி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரத்து 690-க்கும், தீபாவளி தினத்தில் ரூ.3 கோடியே 94 லட்சத்து 97 ஆயிரத்து 960-க்கும் என 2 நாட்களில் மட்டும் ரூ.7 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 650-க்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
Tags:    

Similar News