செய்திகள்
கோப்பு படம்.

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பொதுமக்களுக்கு சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On 2020-11-15 13:45 GMT   |   Update On 2020-11-15 13:45 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்ற வகையில் கடந்த 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 510 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து 5 ஆயிரத்து 247 பஸ்கள் என ஆக மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 4 நாட்களுக்கு சுமார் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சென்னைக்கு ஆயிரத்து 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை நீங்கலாக பிற நகரங்களுக்கு ஆயிரத்து 915 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 18ஆம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் வழக்கமான 2 ஆயிரம் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

4 நாட்களும் 8 ஆயிரத்து 26 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News