செய்திகள்
தமிழக அரசு

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-11-12 21:26 GMT   |   Update On 2020-11-12 21:26 GMT
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனசாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளியையொட்டி 10 சதவீத போனஸ் அறிவிக்கப்படுகிறது. அதாவது 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.

இதுதவிர வேறு எந்தவிதமான நிதி சலுகைகளையும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தமிழக அரசிடம் கேட்கப்பட கூடாது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News