செய்திகள்
சிறப்பு பஸ்

தீபாவளி பண்டிகை- சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2020-11-12 09:50 GMT   |   Update On 2020-11-12 09:50 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம்:

சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தினமும் 1,300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் ஏறி தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்றிரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இது குறித்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலமாக சென்னையில் இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் சேலத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய வழித்தடத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதற்கேற்ப டவுன் பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News