செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 395 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-11-12 07:28 GMT   |   Update On 2020-11-12 07:28 GMT
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

* தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

* தமிழகத்தில் இந்தாண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவ.18-ந்தேதி அல்லது நவ.19-ந்தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

* நாள்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

* 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ்.சில் 304, பி.டி.எஸ்.சில் 91 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

* திட்டமிட்டபடி நவ.16ந்தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News