செய்திகள்
கைது

கோழிப்பண்ணையில் 483 டன் வெங்காயம் பதுக்கிய 5 பேர் கைது

Published On 2020-11-12 07:20 GMT   |   Update On 2020-11-12 07:20 GMT
கோழிப்பண்ணையில் 483 டன் வெங்காயத்தை பதுக்கிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில், தீபாவளி பண்டிகையையொட்டி பெரிய வெங்காயத்தை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், திருச்சி உட்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ஆலத்தூர் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 4 கோழிப்பண்ணைகளில் பெரிய வெங்காயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்து கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெங்காயம் பதுக்கி வைக்க உடந்தையாக இருந்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முத்துச்செல்வம்(வயது 30), ரவிச்சந்திரன்(32), அழகேசன்(64), நடராஜன்(54) மற்றும் வெங்காய இடைத்தரகர் வீரமணி (31) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வெங்காய மொத்த வியாபாரியான பாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்


Tags:    

Similar News