செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி?- சென்னை ஐகோர்ட் கேள்வி

Published On 2020-11-10 11:33 GMT   |   Update On 2020-11-10 12:18 GMT
தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

வேல் யாத்திரையை தடுக்க கூடாது என பாரதிய ஜனதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக பாஜகவிடம் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இவ்வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:-

தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி? அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்காமல் வேல் யாத்திரை நடத்தியது ஏன்? வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீதான காவல்துறையின் முடிவில் தலையிட முடியாது.

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த பிறகு நீதிமன்றம் வாருங்கள் என  தெரிவித்தனர்.
Tags:    

Similar News