விபிஎப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர் அழைத்து விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விபிஎப் கட்டணம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை - கடம்பூர் ராஜூ தகவல்
பதிவு: நவம்பர் 09, 2020 16:05
அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (11ந்தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்காக வருகை தர உள்ளார். முதலமைச்சர் வருகை குறித்தும், முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வரை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் விபிஎப் கட்டணம் தொடர்பான பிரச்சனை உகந்தது அல்ல என்றும், கால அவகாசம் குறைவாக உள்ளதால் தற்போது புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும், விபிஎப் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு ஏற்பட்டால் அது மகிழ்ச்சியான விஷயம், இல்லையென்றால், முதல்வரின் அனுமதி பெற்று இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்தார்.
Related Tags :