செய்திகள்
கலெக்டர் வீரராகவராவ்

கட்டணமில்லாமல் திறன் மேம்பாட்டு பயிற்சி- கலெக்டர் வீரராகவராவ் தகவல்

Published On 2020-11-06 08:55 GMT   |   Update On 2020-11-06 08:55 GMT
ஆதிதிராவிட மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கட்டணமில்லாமல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

களதொழில்நுட்ப வல்லுனர் ஏ.சி., குளிர்சாதனபெட்டி, உதவி எலக்ட்ரீஷியன் பயிற்சிகளுக்கு பீப்பிள் ஓரியண்டட் டிரஸ்ட் என்ற நிறுவனத்தின் மூலம் சவேரியார்பட்டணம், சனவேலியில் பயிற்சி வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 9750475024. மேலும் உதவி அழகு சிகிச்சையாளர் பயிற்சிக்கு நாகசிவா என்ற நிறுவனத்தின் மூலம் சாலைத்தெரு, ராமநாதபுரத்திலும் பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 7708665478. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு தாங்கள் விரும்பும் பயிற்சியில் பங்கேற்கலாம்.

மாணவ- மாணவிகள் பயிற்சி பெற சென்று வருவதற்கான பயணப்படி, போக்குவரத்து செலவு மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் மாவட்ட தாட்கோ மேலாளரிடம் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஏதுவாக தொழில் தொடங்க, தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கிகடன் உதவி வழங்க ஆவண செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News