செய்திகள்
கோப்புபடம்

தர்மபுரியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-05 12:44 GMT   |   Update On 2020-11-05 12:44 GMT
தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். 

நிர்வாகிகள் பெருமாள், முனியப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். 

இதைக் கருத்தில் கொண்டு சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். இந்த போனஸ் தொகை தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக தொழிலாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News