செய்திகள்
கோப்புபடம்

திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2020-11-05 09:56 GMT   |   Update On 2020-11-05 09:56 GMT
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
திருச்சி:

மின்வட்டங்களில் பணியாற்றும் பொறியாளர், அலுவலர்களின் பணிகளை ஒழிப்பதை கைவிட வேண்டும், துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களைநியமித்து பராமரிப்பை தனியாருக்கு விடக்கூடாது. மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். சரண்டர் லீவுத் தொகையை வழங்கிட வேண்டும். 

மின்வாரியத்தில் காலியாக உள்ள 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. 

தர்ணா போராட்டத்துக்கு தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் மலையாண்டி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பொறியாளர் கழக மண்டல துணை தலைவர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News