செய்திகள்
கமல்ஹாசன்

சட்டசபையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் -கமல் ஹாசன் உறுதி

Published On 2020-11-05 08:38 GMT   |   Update On 2020-11-05 15:29 GMT
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை:

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். அவரது நிலைப்பாடு முன்னரே எனக்கு தெரியும். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியின் உடல்நலமும் முக்கியம்; அரசியல் கட்சி பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

3வது அணி அமைந்துவிட்டது. நல்லவர்கள் 3வது அணிக்கு வர வேண்டும். நல்லவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள்; அவர்களை அழைக்கிறேன்.

நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வியூகம். நல்லவர்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். நல்லவர்கள் வரும்போது 3வது அணியாக இருக்காது; முதல் அணியாக அது இருக்கும்.

நல்லவர்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். கூட்டணி குறித்து பதில் சொல்லக்கூடிய காலம் இது இல்லை. கூட்டணி பற்றி பேசும் தருணம் இதுவல்ல.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. சட்டசபையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்புமனு தாக்கலின்போது தெரியும். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளனர்.

புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை பற்றி இப்போது பேச தேவையில்லை.

பாஜக வேல் யாத்திரையை ரத்து செய்தது நல்லதே; நான் பி டீமாக இருந்தது இல்லை.

வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு ‘வேலை வாங்கிக் கொடுப்பதே எனது வேலையாக இருக்கும்’ என்று கூறிய அவர், தாங்கள் நேர்மையானவர்கள் என பிற கட்சிகளால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News