செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா இரண்டாவது அலை தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-11-03 13:05 GMT   |   Update On 2020-11-03 13:05 GMT
கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

ஒரு கோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி பயன்படுத்தி தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். தொற்று அதிகம் பரவ பண்டிகைக் காலம் காரணமாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News