செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றம் -மு.க.ஸ்டாலின்

Published On 2020-11-02 05:48 GMT   |   Update On 2020-11-02 05:48 GMT
விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

* விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கேரளா போல் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

* எதிர்ப்புக்கிடையே நிறைவேறியுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வில் காரிருள் சூழ்ந்துள்ளது.

* வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக்கிழங்கு, காய்கறிகள் பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன.

* விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி தீபாவளி நேரத்தில் இடைத்தரகர்களால் விலையேற்றம் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News