செய்திகள்
ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-31 10:29 GMT   |   Update On 2020-10-31 10:29 GMT
பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி கரூர் மண்டலங்களை சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., டி.டி.எஸ்.எப்., எச்.எம்.எஸ். அண்ணல் அம்பேத்கர் முன்னணி மற்றும் எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம், துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று நடந்தது. தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க வேண்டும். 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது அதிகாரிகள் எடுக்கும் அத்துமீறல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திட வேண்டும். சராசரி விடுப்பு என பிடித்த விடுப்பு மற்றும் சம்பளத்தை திரும்ப வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கே.கே.குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிங்கராயர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News