செய்திகள்
மருத்துவ கழிவுகள்

சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - தொற்றுநோய் பரவும் அபாயம்

Published On 2020-10-29 18:10 GMT   |   Update On 2020-10-29 18:10 GMT
சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்:

சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புகளூர் செல்லும் பிரிவு சாலை அருகே சாலை ஓரத்தில் வழி நெடுகிலும் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி வாகனங்களில் கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளனர்.

இதனால் மருத்துவ கழிவுகளிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் ஏற்பட்டு அந்த சாலை வழியாக வாகனங்களில் செல்லும்போது மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News