செய்திகள்
பீகாரில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்

பீகார் தேர்தல், இயக்குனர் சீனு ராமசாமிக்கு மிரட்டல், வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவி உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-10-28 07:39 GMT   |   Update On 2020-10-28 07:39 GMT
பீகாரில் முதல்கட்ட தேர்தல், இயக்குனர் சீனு ராமசாமிக்கு மிரட்டல், வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

* கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சூழலுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தல் இன்று தொடங்கியது. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர்கள கொரோனா விதிமுறைகளை பின்பற்றும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

* பீகார் மக்கள் மாநிலத்தில் காட்டு தர்பாரை கொண்டு வந்தவர்களை, பீகாரை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக பிரதமர் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

* பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்ததும் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாக சிரக் பஸ்வான் கூறி உள்ளார்.

* கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79.90 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,893 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 72.59 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

* கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திரையரங்குகளை திறப்பது குறித்து கலெக்டர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

* தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

* மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ்  மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வி.எம்.கடோச் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வருகிறார். 

* புதுவையில் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

* புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்றி அதிநவீன கருவி மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்படுகிறது.

* அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

* சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

* அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

* தந்தை இறந்த துயரத்திலும் மந்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது என பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு தெரிவித்தார்.

* சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான ஜியானி இன்பான்டினோ, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

* தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News