செய்திகள்
கொசு

அதிகரிக்கும் கொசு தொல்லையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்

Published On 2020-10-28 07:34 GMT   |   Update On 2020-10-28 07:34 GMT
கூத்தாநல்லூர் பகுதியில் அதிகரிக்கும் கொசு தொல்லையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் வடபாதிமங்கலம், பழையனூர், ஒகைப்பேரையூர், குலமாணிக்கம், கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில், கொசு தொல்லையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு தொல்லையை கட்டுப்படுத்தி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News