செய்திகள்
போலீஸ் விசாரணை

இடையூறாக இருந்த மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொலை செய்ய முயற்சி- போலீசார் தீவிர விசாரணை

Published On 2020-10-27 11:15 GMT   |   Update On 2020-10-27 11:15 GMT
கரூரில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் ராயனூர் நேதாஜி நகரில் வசித்து வருபவர் நீலவேணி (வயது 28). இவரது கணவர் மணி. இந்த தம்பதிக்கு மாதவன் (9) என்கிற மகன் உள்ளான். இந்நிலையில் நீலவேணிக்கும், மணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலவேணிக்கும், ராயனூர் அசோக்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. சம்பவத்தன்று நீலவேணியின் வீட்டுக்கு பாலசுப்பிரமணி வந்துள்ளார். அப்போது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கூறி, பாலசுப்பிரமணியும், நீலவேணியும் சேர்ந்து மாதவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மாதவனின் நெற்றி, கண் உள்ளிட்ட இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் சிறுவன் மாதவனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மாதவன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணி மீது கொலை முயற்ச்சி வழக்கு பதிந்து, அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News