செய்திகள்
பழங்கள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ரூ.5 கோடிக்கு பூ, பழங்கள், வாழைத்தார்கள் விற்பனை

Published On 2020-10-26 09:52 GMT   |   Update On 2020-10-26 09:52 GMT
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விற்பனையும் ஜோராக நடைபெற்றது.
நெல்லை:

நெல்லையில் உள்ள டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சந்திப்பு பூ மார்க்கெட்டில் வீட்டில் பூஜை செய்வதற்காக பொதுமக்கள் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பூக்கள் நேற்று விற்பனை யானது. இதேபோல் ரூ.80 லட்சம் மதிப்பிலான பழங்கள், ரூ.55 லட்சம் மதிப்பிலான வாழைத் தார்கள் மற்றும் வாழை கட்டுகள் விற்பனையானது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வழக்கத்தைவிட இந்த ஆண்டு வாழைத்தார்கள் மற்றும் பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 250 டன் பூக்கள் விற்கப்பட்டது.

அங்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான பூக்கள், ரூ.1 கோடி வரை பழங்கள், ரூ.80 லட்சம் வரையிலான வாழைத்தார்கள் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதியில் வழக்கம் போல் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஆனது.

இதேபோல் தென்மாவட்டங்களில் தோவாளைக்கு அடுத்தப்படியாக பெரிய பூ மார்க்கெட்டான சங்க ரன்கோவிலில் வழக்கமாக ஆயுத பூஜை நாட்களில் சுமார் 400 முதல் 500 டன் பூக்கள் விற்பனை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது 200 முதல் 300 டன் வரை மட்டுமே பூக்கள் விற்பனையானது.

மாவட்டத்தில் ரூ.25 லட்சத்தில் பழங்களும், ரூ.35 லட்சம் மதிப்பிலான பூக்களும் விற்பனை ஆனது. இதுதவிர ரூ.55 லட்சம் வரை வாழைத்தார்கள், இலைகள் விற்பனை நடந்தது.

ஆயுத பூஜை விற் பனையாக 3 மாவட்டங்களிலும் நேற்று மட்டும் பூ, பழம், வாழைத்தார்கள் சுமார் ரூ.5 கோடிக்கு நடைபெற்றது.

Tags:    

Similar News