செய்திகள்
மல்லிகைப்பூக்கள்

ஆயுத பூஜைக்கு ரூ.8 கோடிக்கு பூக்கள் விற்பனை

Published On 2020-10-26 07:54 GMT   |   Update On 2020-10-26 07:54 GMT
தருமபுரி மாவட்டத்தில் ஆயுத பூஜைக்கு ரூ.8 கோடி அளவில் பூக்கள் விற்பனையானது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் அதிகளவில் விற்பனையானது. இதில் குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும் விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் ரூ.8 கோடி அளவில் பூக்கள் விற்பனையாகி உள்ளது.

அதாவது சாமந்தி 100 டன், சம்பங்கி 25 டன், குண்டு மல்லி 3டன், சன்ன மல்லி-5 டன், அளரி -2 டன், கனகாம்பரம்-1 டன், ஜாதிமல்லி- 2 டன், ரோஜா- 5 டன், பன்னீர் ரோஜா-5 டன், காக்கடா- 5 டன் என விற்பனையாகி உள்ளதாக தருமபுரி பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஆயுத பூஜையையொட்டு வாழைப்பழம், ஆப்பிள், மாதுளம், ஆரஞ்சு ஆகியவை சுமார் ரூ.1 கோடி அளவுக்கு விற்பனையாகி உள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News