செய்திகள்
முதல்வர் பழனிசாமி

உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல்- முதல்வர் பழனிசாமி

Published On 2020-10-23 13:04 GMT   |   Update On 2020-10-23 13:04 GMT
உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது,

உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முக ஸ்டாலின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல். நீட்தேர்வை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது திமுக., காங்கிரஸ்தான். 7.5 சதவீகித ஒதுக்கீடு மசோதா குறித்து விரைவில் முடிவு செய்வதாக அமைச்சர்களிடம் ஆளுநர் உறுதியளித்துள்ளார். 

ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை என கூறுவதற்கு திமுக, காங்கிரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. முக ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பது, மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது. சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் நேரத்தில் தங்களால்தான் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முக ஸ்டாலின் முயற்சி செய்கிறார். 

ஸ்டாலின் நடவடிக்கையை கண்டு தமிழக மக்கள் என்னி நகையாடுவதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார். கொரோனா தடுப்பில் அரசுக்கு இருந்து வரும் நற்பெயரை கண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி அடைந்துள்ளார். 

மக்களின் நலன் கருதி அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றேன். அரசுக்கு மக்கள் ஆதரவு பெறுகி வருவதைக் கண்டு அறிக்கை அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
Tags:    

Similar News