செய்திகள்
வெடிவிபத்து ஏற்பட்ட இடம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி: துணை முதல்வர், மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published On 2020-10-23 11:25 GMT   |   Update On 2020-10-23 11:25 GMT
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்ததற்கு துணை முதல்வர், முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விருதுநகர் - எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட எதிர்பாரா வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!

உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்! தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை @CMOTamilNadu அரசு உறுதி செய்திடுக!’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News