செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு நடைபெற்ற போது எடுத்த படம்.

கலைக்குழு மூலம் தீயணைப்பு வீரர்கள் கொரோனா விழிப்புணர்வு

Published On 2020-10-23 09:30 GMT   |   Update On 2020-10-23 09:30 GMT
பெரம்பலூரில் கலைக்கழுவினர் மூலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர்:

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணித்துறை இயக்குனரும், டி.ஜி.பி.யுமான சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூரில் முக்கியமான இடங்களில் தீயணைப்பு நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கலைக்கழுவினர் மூலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமை தாங்கினார். உதவி தீயணைப்பு அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார். அப்போது கலைக்குழுவினர் பொதுமக்களிடையே எமதர்மன், சித்ரகுப்தன், அம்மன், ரோபோ உள்ளிட்ட வேடங்கள் அணிந்து வந்து கொரோனா பரவும் விதம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவற்றை நாடகம் போல் நடித்து காட்டி விளக்கினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு முக கவசம், சானிடைசர் (கிருமி நாசினி), கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Tags:    

Similar News