செய்திகள்
அகற்றப்பட்ட பாறை அகற்றம்

ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த 5 டன் பாறை அகற்றம்

Published On 2020-10-22 05:26 GMT   |   Update On 2020-10-22 05:26 GMT
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த 5 டன் பாறை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் மழைக்காலங்கள் தொடங்கியதை அடுத்து பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் நேற்று ஒகேனக்கல் கணவாய் பகுதி ஆய்வு செய்தார். அப்போது சாலையையொட்டி மலையில் கீழே விழும் நிலையில் 5 டன் எடை கொண்ட பாறைஆபத்தான நிலையில் இருந்தது.

இந்த பாறை மழைக் காலங்களில் சறுக்கி வாகனங்கள் மீது விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரங்களை வரவழைக்கப்பட்டு 5 டன் எடை கொண்ட பாறையை அகற்றினர்.


Tags:    

Similar News