செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-20 11:16 GMT   |   Update On 2020-10-20 11:16 GMT
தஞ்சை ரெயிலடியில் தலைமை தபால் நிலையம் அருகே மூவேந்தர் அனைத்து கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை ரெயிலடியில் தலைமை தபால் நிலையம் அருகே மூவேந்தர் அனைத்து கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் முத்துகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், கவுரவ தலைவர்கள் சுந்தர்ராஜ், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்தையா வரவேற்றார். செயல் தலைவர் கனகராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் தேவையான மணல் குவாரிகளை அமைத்து மாட்டு வண்டிகள், மினிலாரிகளில் மணல் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும். இதனால் மணல் விலை உயர்வு கட்டுக்குள் வந்துவிடும். தஞ்சை பெரியகோவில் முன்பு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.

இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல், மனுக்கள் கொடுத்தல் போன்றவற்றிற்கு ஆன்லைன் முறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் சங்க ஆலோசகர் வைத்தியநாதன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
Tags:    

Similar News