செய்திகள்
சென்னை ஐகோர்ட்

இதற்காக அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்- தியாகிகள் ஓய்வூதியம் கோரிய வழக்கில் ஐகோர்ட் கண்டனம்

Published On 2020-10-17 10:27 GMT   |   Update On 2020-10-17 10:27 GMT
தியாகிகளுக்கான ஓய்வூதியம் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தது.
சென்னை:

தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது தியாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தான் சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் வழங்கியும், தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக வெட்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

தனது இறுதி மூச்சுக்கு முன் சுதந்திரப் போராட்ட வீரர் என அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Tags:    

Similar News