செய்திகள்
ரஜினிகாந்த்

ராகவேந்திரா மண்டப சொத்து வரியை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்

Published On 2020-10-15 08:02 GMT   |   Update On 2020-10-15 12:14 GMT
சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.
சென்னை:

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரி நோட்டீசை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது, ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் தனது மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இது குறித்து சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ‘நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும், தவறை தவிர்த்திருக்கலாம், அனுபவமே பாடம்’ என்று கூறினார்.

இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை  மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். 

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த இன்றுடன் கெடு நிறைவடையும் நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு ரஜினிகாந்த் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News