தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உடலுக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தவுசாயம்மாள் உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தவுசாயம்மாளின் 3-ம் நாள் ஈமக்கிரியை நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தவுசாயம்மாள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 5 நிமிடம் அங்கு அமர்ந்திருந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.