செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனாவா?- வியாபாரிகள் சங்க தலைவர் விளக்கம்

Published On 2020-10-13 06:03 GMT   |   Update On 2020-10-13 06:03 GMT
கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனாவா? என்பது தொடர்பாக வியாபாரிகள் சங்க தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறியதாவது:

கோயம்பேடு சந்தையில் 200 கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா என கண்காணிக்கப்படுகிறது.

திருமழிசையில் இருந்து கோயம்பேட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின் காய்கறி விலை குறைந்துள்ளது.

கோயம்பேடு வியாபாரிகள் மூலம் மீண்டும் கொரோனா பரவுகிறது என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 22 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 சதவீதம் பேருக்கு அதாவது 40 முதல் 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மார்க்கெட் வியாபாரிகள் அல்ல, மார்க்கெட்டுக்கு வந்து சென்ற வெளி வியாபாரிகள் என்பதே உண்மை. மார்க்கெட் வியாபாரிகளால் கொரோனா பரவவில்லை. தவறான தகவல்கள் மூலமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகும் அபாயம் நிலவுகிறது.

மாதவரம், திருமழிசையை விட கோயம்பேடு சந்தை மிக பாதுகாப்பாக இருக்கிறது. எனவே தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல் வியாபாரிகள்-தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி கோயம்பேடு சந்தையை முழுவதுமாக திறக்க அரசும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News