செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனா பாதித்தவர் வீடுகளை மறைத்து தகரம் அமைக்க என்ன காரணம்?- உயர் நீதிமன்றம் கேள்வி

Published On 2020-10-06 08:12 GMT   |   Update On 2020-10-06 08:12 GMT
கொரோனா தொற்று பாதித்தவர் வீடுகளை மறைத்து தகரம் அமைக்க என்ன காரணம் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

கொரோனா அறிகுறி இல்லதாவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? மேலும் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர்.

மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்டோபர் 19- தேதி பதிலளிக்கவேண்டும் என்று தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News